Dailyhunt
தித்திக்கும் சுவையில் பாரம்பரிய பாசிப்பருப்பு உருண்டை.., எப்படி செய்வது?

தித்திக்கும் சுவையில் பாரம்பரிய பாசிப்பருப்பு உருண்டை.., எப்படி செய்வது?

Lankasri News 1 month ago

ந்த சுவையான பாசிப்பருப்பு உருண்டையை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் பாரம்பரிய பாசிப்பருப்பு உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் அரிசி மாவு அடை.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு- 1 கப்
  • சர்க்கரை- ½ கப்
  • ஏலக்காய்- 2
  • நெய்- ¼ கப்
  • முந்திரி- 10

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு வாணல் வைத்து சூடானதும் அதில் பாசிப்பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும்.

பின் இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து அதே மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு பெரிய தட்டில் அரைத்த பாசி பருப்பு மாவு, சர்க்கரை கலவை நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்துகொள்ளவும்.

இறுதியாக இதில் உருக்கிய நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருண்டையாக பிடித்தால் சத்தான பாசிப்பருப்பு தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News