வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த அரிசி மாவு அடை மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில், சுவையான அரிசி மாவு அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தித்திக்கும் சுவையில் சத்தான ராகி கொழுக்கட்டை.., எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- வெங்காயம்- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- பச்சைமிளகாய்- 2
- உப்பு- தேவையான அளவு
- சீரகம்- 1 ஸ்பூன்
- எண்ணெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்கு பிணைந்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் பிணைந்த மாவை வட்டமாக தட்டிக்கொள்ளவும்.
இறுதியாக அதன் மேல் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் சுவையான அரிசி மாவு அடை தயார்.

