Dailyhunt
தித்திக்கும் சுவையில் சத்தான ராகி கொழுக்கட்டை.., எப்படி செய்வது?

தித்திக்கும் சுவையில் சத்தான ராகி கொழுக்கட்டை.., எப்படி செய்வது?

Lankasri News 1 month ago

ந்த சுவையான ராகி கொழுக்கட்டையை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், தித்திக்கும் சுவையில் ராகி கொழுக்கட்டையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் கொழுக்கட்டை.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு- 1 கப்
  • உப்பு- 1 சிட்டிகை
  • தேங்காய்- 1 மூடி
  • நாட்டுச்சர்க்கரை- 1 கப்
  • ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு சேர்த்து கலந்து சுடுதண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிணைந்துகொள்ளவும்.

பின் ஒரு வாணலில் துருவிய தேங்காய், நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியானதும் அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து பிணைந்த மாவை வட்டமாக தேய்த்து அதன் நடுவில் தேங்காய் கலவையை வைத்து மடித்துக்கொள்ளவும்.

இறுதியாக இதனை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சாத்தான ராகி கொழுக்கட்டை தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News