Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மத்திய கிழக்கின் அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழிப்போம்- எச்சரித்துள்ள ஈரான்

மத்திய கிழக்கின் அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழிப்போம்- எச்சரித்துள்ள ஈரான்

Lankasri News 1 week ago

மெரிக்காவின் வான்வழி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் சார்பில் பேசிய இராணுவ அதிகாரி கர்னல் எப்ராஹிம் சொல்ஃபகாரி, "அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளையும் எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப்படைகளால் நசுக்கப்படும்" எனக் கூறினார்.


2027 முதல் இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது கட்டாயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் பாலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ஈரான், "ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தலையிட அனுமதிக்கமாட்டோம். இது ஈரானின் வெல்லமுடியாத சிவப்பு கோடு'" என தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை, அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாக இருப்பதால், இங்கு எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும்.

சமீபத்தில் ஈரான் தனது புதிய ட்ரோன் உத்தியை வெளிப்படுத்தி, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் வான்வழி பாதுகாப்பை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால், பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மிகவும் பதற்றமானதாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்கும், உலகளாவிய பாதுகாப்பிற்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.


ஜெலென்ஸ்கியின் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி., உக்ரைனில் வெடித்துள்ள போராட்டம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News