Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
2027 முதல் இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது கட்டாயம்!

2027 முதல் இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது கட்டாயம்!

Lankasri News 1 week ago

ங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை கட்டாயமாக நடைபெற உள்ளது.

சுகாதார மற்றும் சமூக பராமரிப்புத் துறை இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தங்க நீர்மூழ்கிக் கப்பல்

SMA நோய் குழந்தைகளின் தசைகளை பலவீனப்படுத்தி, உட்கார, தவழ, நடக்க முடியாமல், சுவாசிப்பதாலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுத்துகிறது.

சிகிச்சை இல்லாமல் விட்டால், இரண்டு ஆண்டுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 48 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புதிய திட்டத்தின் மூலம், குழந்தைகள் பிறந்த 5-ஆம் நாளில் எடுக்கப்படும் heel-prick test மூலம் SMA பரிசோதனை செய்யப்படும். இதுவரை 10 நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த பரிசோதனை, இனி SMA-க்கும் பயன்படுத்தப்படும்.

முன்பு அறிவிக்கப்பட்ட பைலட் திட்டம் 72 சதவீத குழந்தைகளுக்கே பரிசோதனை செய்யும் வகையில் இருந்ததால், "postcode lottery" எனப்படும் சமத்துவமின்மைக்கு விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, அரசு அனைத்து குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.


பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: ரோமிங் கட்டணங்கள் நீக்கம், e-gates வசதி

SMA UK அமைப்பின் தலைவர் Giles Lomax, "இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய முன்னேற்றம்" எனக் கூறியுள்ளார்.

Muscular Dystrophy UK அமைப்பும் இதை "வரலாற்று சிறப்புமிக்க தருணம்" என வரவேற்றுள்ளது.

இந்த முடிவு SMA நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.


ஒன்பது நாடுகள் இணைந்து புதிய உலக பாதுகாப்பு வங்கி: கனடா அறிவிப்பு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News