Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முகப்பொலிவை அதிகரிக்க உதவும் தர்பூசணி பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?

முகப்பொலிவை அதிகரிக்க உதவும் தர்பூசணி பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?

Lankasri News 3 months ago

வெயில் காலத்தில் சருமத்தில் ஏராளமான பிரச்சனைகள் உண்டாகும்.

அதன்படி, கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழம் தான் தர்பூசணி.

இந்த தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, பல்வேறு வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன.

அந்தவகையில், தர்பூசணி பழத்தைக் கொண்டு பேஸ்பேக்கை போடும் போது, சருமம் பளிச்சென்றும், பிரகாசமாகவும் இருக்கும்.


முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வெந்தய ஷாம்பு.., எப்படி தயாரிப்பது?

1. தேவையான பொருட்கள்

  • தர்பூசணி- 1 துண்டு
  • வெள்ளரிக்காய்- 1 துண்டு

எப்படி தயாரிப்பது?

முதலில் ஒரு கிண்ணத்தில் மசித்த வெள்ளரிக்காய் கூழை எடுத்து, அத்துடன் சிறிது தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால், வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கலாம்.

2. தேவையான பொருட்கள்

  • தர்பூசணி- 1 துண்டு
  • தயிர்- 1 ஸ்பூன்

எப்படி தயாரிப்பது?

முதலில் ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து, அத்துடன் தர்பூசணி சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இந்த பேஸ்பேக் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும்.


பரபரப்பான தமிழ்நாடு அரசியல் களம், அடுத்து நடக்கப்போவது என்ன?

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News