Dailyhunt
நாவூறும் சுவையில் மாங்காய் பச்சடி.., எப்படி செய்வது?

நாவூறும் சுவையில் மாங்காய் பச்சடி.., எப்படி செய்வது?

Lankasri News 2 days ago

பொதுவாக, தமிழ் புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் இந்த மாங்காய் பச்சடி தயாரிக்கப்படும்.

இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், நாவூறும் சுவையில் மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தித்திக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமுன்.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • எண்ணெய்- 2 ஸ்பூன்
  • கடுகு- 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 3
  • மாங்காய்- 2
  • உப்பு- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
  • மிளகாய்- தூள்- ½ ஸ்பூன்
  • பெருங்காயம்- 1 சிட்டிகை
  • அரிசி மாவு- 1 ஸ்பூன்
  • வெல்லம்- 1 கப்

செய்முறை

முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நறுக்கிய மாங்காய் சேர்த்து வதக்கவும்.

பின் இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவைக்கவும்.

மாங்காய் நன்கு வெந்து வந்ததும் அதில் தண்ணீரில் கலந்த அரசி மாவு சேர்த்து கலந்துகொள்ளவும்.

இறுதியாக இதில் வெல்லக்கரைசலை சேர்த்து கொதிக்கவைத்து கெட்டியாகி வந்ததும் இறக்கினால் சுவையான மாங்காய் பச்சடி தயார்,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News