Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்க்குகளை குறிவைத்துள்ள பிரித்தானியா

ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்க்குகளை குறிவைத்துள்ள பிரித்தானியா

Lankasri News 3 days ago

பிரித்தானிய அரசு, ரஷ்யாவுடன் தொடர்புடைய கிரிப்டோகரன்சி தளங்கள், வங்கிகள் மற்றும் நிதி நெட்வொர்க்குகளை குறிவைத்து புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போரை தொடர ரஷ்யாவிற்கு நிதி ஆதாரமாக இருக்கும் இந்த வலையமைப்புகளை முடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"உக்ரைன் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும் பணப்பாதைகளை கண்டறிந்து மூடுகிறோம். ரஷ்யாவின் தாக்குதல்களை ஆதரிப்பவர்களுக்கு தக்க விளைவுகள் ஏற்படும்" என பிரித்தானிய வெளிவிவகாரத் துறை செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இந்த தடைகள், ரஷ்ய அரசின் ஆதரவு பெற்ற A7 நெட்வொர்க் உட்பட பல தளங்களை குறிவைக்கின்றன.

இவை வெளிநாட்டு வங்கி அமைப்புகளை பயன்படுத்தி நிதி பரிமாற்றங்களை மறைமுகமாகச் செய்து, தடைகளை தவிர்க்க உதவியதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.

கார்ப்பரேட் வேலையை விட்டு ஓலா ஓட்டுநராக மாதம் ரூ.6.5 லட்சம் சம்பாதிக்கும் MBA பட்டதாரி

இந்த புதிய தடைகள், ரஷ்யாவை மையமாகக் கொண்டு செயல்படும் கிரிப்டோ பரிமாற்ற தளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்களையும் உள்ளடக்கியுள்ளன.

இதன் மூலம் பிரித்தானியா, தனது கூட்டாளிகளுடன் இணைந்து ரஷ்யாவின் போர் நிதி ஆதாரங்களை முறியடிக்க முயற்சிக்கிறது.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

கிரிப்டோ நெட்வொர்க்குகள் வழியாக நடைபெறும் பரிமாற்றங்கள், தடைகளை மீறுவதற்கான முக்கிய வழியாகக் கருதப்படுவதால், பிரித்தானிய அவற்றை நேரடியாக குறிவைத்துள்ளது.

போலி QR Code மோசடி: பாதுகாப்பாக ஸ்கேன் செய்வது எப்படி?

#UKSanctions #RussiaCrypto #UkraineWar #CryptoBan #A7Network #GlobalPolitics #CryptoNews

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News