சுவிட்சர்லாந்திலேயே குறைந்த வரி விதிக்கும் மாகாணம் என்ற பெயரை ஒரு மாகாணம் இழந்துள்ளது.
குறைந்த வரி விதிக்கும் மாகாணம்
சுவிட்சர்லாந்திலேயே குறைந்த வரி விதிக்கும் மாகாணம் என்ற பெயர் Zug மாகாணத்துக்குத்தான் இருந்தது.
ஆனால், அந்தப் பெயரை தற்போது Luzern மாகாணம் பெற்றுவிட்டது.
ஆம், 2026இல் Zug மாகாணத்தின் அதிகபட்ச கார்ப்பரேட் வரி வீதம் 11.71 என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், Luzern மாகாணத்தின் வரி வீதமோ 11.66தான்.
அறுவடைக்குத் தயாராக காத்திருந்த உணவுப்பயிர்: சுவிஸ் மாகாணமொன்றில் அதிர்ச்சி
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஐரோப்பாவிலேயே குறைந்த வரி விதிக்கும் நாடு ஹங்கேரி என தகவல் வெளியாகியுள்ளது. ஹங்கேரியின் கார்ப்பரேட் வரி வீதம் Luzern மாகாணத்தின் வரி வீதத்தை விட குறைவு.
அதாவது, ஹங்கேரியின் கார்ப்பரேட் வரி வீதம் 9 சதவிகிதம் மட்டுமே!

