Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண் - புகார் அளித்த கணவர்

திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண் - புகார் அளித்த கணவர்

Lankasri News 1 day ago

Thirunelveli women delivered 7 months baby next day of marriage: திருநெல்வேலியில், திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண் மீது அவரது கணவர் மோசடி புகார் அளித்துள்ளார்.

திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற பெண்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே அரியகுளம் லைன் தெருவைச் சேர்ந்த 25 வயதான வெங்கடேஷ் கொத்தனாராக பணியாற்றி வருகிறார்.

கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தாழையூத்து அருகே ஏரான்குடிபாலத்தைச் சேர்ந்த பிச்சம்மாள் என்பவருடன் வெங்கடேஷ்க்கு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த பின்னர், வெங்கடேஷின் வீட்டிற்கு வந்த பிச்சம்மாளின் வயிறு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருப்பதை கவனித்த வெங்கடேஷ் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த பிச்சம்மாள், தனக்கு வயிற்றில் பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருந்து சாப்பிடுவதால் வயிறு இப்படி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலையில், கழிவறைக்கு சென்ற அந்த பெண்ணிற்கு கடுமையான ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை? உச்சநீதிமன்றம் பரிந்துரை

இந்த நிலையில் கழிவறையில், 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பிச்சம்மாள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்திருக்கிறார். அந்த விடயத்தை என்னிடம் மறைத்து திருமணம் செய்து, இப்போது குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுள்ளார் என வெங்கடேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், பிச்சம்மாள் மீது நம்பிக்கை மோசடி, கருச்சிதைவு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News