Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான வரகரிசி பொங்கல்.., எப்படி செய்வது?

உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான வரகரிசி பொங்கல்.., எப்படி செய்வது?

Lankasri News 2 days ago

காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவு வரகரிசி பொங்கல்.

வரகரிசி ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த ஒரு பாரம்பரிய சிறுதானியம் ஆகும்.

அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான வரகரிசி பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தித்திக்கும் சுவையில் நுங்கு பால்.., எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு - ½ கப்
  • வரகரிசி - ½ கப்
  • தண்ணீர் - 4 கப்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • நெய் - 2 ஸ்பூன்
  • முந்திரி பருப்பு- 15
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • இஞ்சி - 1 துண்டு
  • பெருங்காய தூள்- ¼ ஸ்பூன்
  • கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை

முதலில் பாசி பருப்பை வாணலியில் மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.

பின் வரகரிசியை எடுத்து, அதை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

அடுத்து ஒரு குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் வரகரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து மூன்று விசில் வரும் வரை வேகவைகத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து கடாயில் நெய் சேர்த்து, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே நெய்யில் அரைத்த மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இறுதியாக தாளித்த பொருட்களை பொங்கலில் ஊற்றினால் சுவையான வரகரிசி பொங்கல் தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News