Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வறட்சியை தாங்கும் புதிய அரிசியை உருவாக்கிவரும் பிரித்தானிய விஞ்ஞானிகள்

வறட்சியை தாங்கும் புதிய அரிசியை உருவாக்கிவரும் பிரித்தானிய விஞ்ஞானிகள்

Lankasri News 4 days ago

பிரித்தானியாவில் University of Nottingham விஞ்ஞானிகள், வறட்சியையும் கடுமையான வெப்பத்தையும் தாங்கக்கூடிய புதிய அரிசி வகைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தினசரி அரிசி உண்பதால், இது உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஆராய்ச்சியாக கருதப்படுகிறது.

அரிசி பயிரிட அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், காலநிலை மாற்றத்தால் மழை குறைவதும், வெப்பநிலை அதிகரிப்பதும் விளைச்சலை பாதிக்கிறது.

"உலக வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அரிசி விளைச்சல் 6 சதவீதம் குறைகிறது. வெப்ப அலைகள் இந்த நிலையை மேலும் மோசமாக்குகின்றன" என நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் எரிக் முர்ச்சி (Erik Murchie) கூறுகிறார்.

Sutton Bonington வளாகத்தில் உள்ள சிறப்பு "growth rooms" மூலம் வறட்சி மற்றும் வெப்ப அழுத்தத்தை தாங்கும் அரிசி செடிகளை விஞ்ஞானிகள் பரிசோதித்து வருகின்றனர்.

"வேர் அமைப்புகளை ஆய்வு செய்வதன் மூலம், தண்ணீரை ஆழமாக உறிஞ்சும் திறன் கொண்ட செடிகளை கண்டறிந்து, அவற்றை இனப்பெருக்கத்தில் பயன்படுத்த முடியும்" என மற்றோரு ஆராய்ச்சியாளரான பேராசிரியர் Ranjan Swarup கூறியுள்ளார்.

மேலும், Hounsfield Facility-ல் உள்ள micro-CT ஸ்கேனர் மூலம் வேர் அமைப்புகளை சேதமின்றி ஆய்வு செய்கின்றனர். இந்த ஆராய்ச்சி, International Rice Research Institute (IRRI) உடன் இணைந்து பிலிப்பைன்ஸில் மூன்று ஆண்டுகள் புல நிலை பரிசோதனைகளில் நடைபெறவுள்ளது.

இந்த திட்டம், International Climate Finance (ICF) நிதியுதவியுடன் நடைபெறுகிறது.

பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்., இந்திய வம்சாவளியினர் முதலிடம்

பிரித்தானியாவானது பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற காலநிலை பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது.

எனவே, இந்த ஆராய்ச்சி உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கும், விலை நிலைத்தன்மைக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு

#RiceResearch #ClimateChange #FoodSecurity #DroughtResistant #NottinghamUniversity #IRRI #AgricultureInnovation
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News