Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை

Minnambalam 2 years ago

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத்தலைவருக்கு, தமிழிசை செளந்தரராஜன் இன்று (மார்ச் 18) கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதே போன்று, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட உள்ளது. இந்த தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு, தமிழிசை செளந்தரராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இன்னும் ஒருசில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர், கடந்த 2019 செப்டம்பரில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 2021ஆம் ஆண்டு கூடுதல் பொறுப்பு தமிழிசைக்கு வழங்கப்பட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam