Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஏற்காடு சாலை விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்!

ஏற்காடு சாலை விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்!

Minnambalam 2 years ago

ற்காடு சாலை விபத்தில் காயமடைந்தவர்களை இன்று (மே 4) எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, 11வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதன் காரணமாக, பேருந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam