சுந்தர்.சி இயக்கிய "அரண்மனை 1, 2 & 3" படங்கள் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் மெயின் ஹீரோவாக சுந்தர்.சி நடிக்க, இவருடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
மே 3 ஆம் தேதி வெளியான அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் 4.15 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழில் வெளியான படங்களிலேயே முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை தற்காலிகமாக அரண்மனை 4 திரைப்படம் பெற்றுள்ளது.
மேலும் தெலுங்கு மொழியில் "பாக்" என்ற பெயரில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 50 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் இந்தியா முழுவதும் 6.25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருப்பதாகவும், தற்போது வரை இந்த படம் 10.90 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரண்மனை சீரிஸ் படங்களில் எப்போதுமே கதைக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாமல் காமெடி மற்றும் ஹாரர் காட்சிகள் மட்டுமே ஈர்க்கும் வகையில் அமைத்திருப்பார் சுந்தர் சி.
ஆனால் இந்த முறை அரண்மனை 4 திரைப்படத்தில் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, கதையுடன் கலந்த காமெடி காட்சிகள், ஹாரர் காட்சிகள் என ஒரு இயக்குநராக அனைவரையும் திருப்திப்படுத்தி இருக்கிறார் சுந்தர் சி.
தொடர்ந்து சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அரண்மனை 4 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரும் அடுத்தடுத்த நாட்களில் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கார்த்திக் ராஜா
TOXIC : யாஷுடன் நடிக்கும் நயன்தாரா?
டி20க்கான இந்திய அணியில் நடராஜனுக்கு இடமில்லையா? ஷேன் வாட்சன் ஓபன் டாக்!

