Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Minnambalam 2 years ago

பிளஸ் 2 ரிசல்ட்!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

மதிமுக 31-ஆவது ஆண்டு துவக்க விழா!

மதிமுகவின் 31-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கொடியேற்றுகிறார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு!

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இ பாஸ் விண்ணப்பம்!

கொடைக்கானல் மற்றும் நீலகிரிக்கு சுற்றுலா செல்ல இன்று முதல் epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

திருச்சி உள்ளூர் விடுமுறை!

திருச்சி அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை ஒட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை!

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தோனேசியா, தாய்லாந்து மோதல்!

இன்றைய ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தோனேசியா, தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

மும்பை, ஹைதராபாத் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

கிச்சன் கீர்த்தனா : வாழைத்தண்டு மோர்

என்னா அடி : அப்டேட் குமாரு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam