Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஈரம் ஸ்டைலில் அடுத்த படம்..! சப்தம் டீசர் எப்படி?

ஈரம் ஸ்டைலில் அடுத்த படம்..! சப்தம் டீசர் எப்படி?

Minnambalam 2 years ago

ரம், குற்றம் 23 போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் அறிவழகன். குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அந்த வெப் சீரிஸைத் தொடர்ந்து மீண்டும் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கினார்.

ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து ஆதியை ஹீரோவாக வைத்து சப்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லக்ஷ்மி மேனன், ரெடின் கிங்ஸ்லி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) சப்தம் படத்தின் டீசரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார்.

அதே போல் சப்தம் படத்தின் டீசரைப் பார்க்கும் போது, சப்தத்தை பயன்படுத்தி தனது எதிரிகளைப் பேய் பழிவாங்குவது போல தெரிகிறது.

டீசர் முழுக்க தமன் இசையால் மிரட்டி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரம் கூட்டணிஎன்பதால் இந்த சப்தம் படத்திற்கும், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

-கார்த்திக் ராஜா

கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்ற மறுப்பா?: பாமக மா.செ.விளக்கம்!

பஹத் ஃபாசிலின் 'ஆவேசம் ' எப்படி இருக்கிறது? - திரைப்பட விமர்சனம்!

பரத் நடிக்கும் கிரைம் த்ரில்லர்… தலைப்பே வித்தியாசமா இருக்கு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam