Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோவையில் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கமா? - தேர்தல் அலுவலர் விளக்கம்!

கோவையில் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கமா? - தேர்தல் அலுவலர் விளக்கம்!

Minnambalam 2 years ago

ங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே கோவை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதாக, கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில், கோவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் அவர்களால் வாக்களிக்க இயலவில்லை எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.

இப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்கு சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழிவகை உள்ளது.

இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடர் நடவடிக்கை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி, தேர்தல் ஆணையத்தால், பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்" என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

இந்திய மீன் மசாலாவில் நச்சுப் பொருள்: சிங்கப்பூர் அரசு அதிரடி முடிவு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam