Dailyhunt
மற்றொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டுகிறதா? - கனிமொழி எம்பி

மற்றொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டுகிறதா? - கனிமொழி எம்பி

Minnambalam 3 weeks ago

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டக் கட்டமைப்பு, இந்தித் திணிப்பிற்கான தெளிவான உந்துதலை அம்பலப்படுத்துகிறது என்று கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2026-27 கல்வியாண்டு முதல், புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத் தேர்வு மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (ஏப்ரல் 4) தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் கனிமொழி கூறியிருப்பதாவது: "தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டக் கட்டமைப்பு, இந்தித் திணிப்பிற்கான தெளிவான உந்துதலை அம்பலப்படுத்துகிறது. 2027-28 முதல் கட்டாய மதிப்பீட்டுடன் கூடிய படிப்படியான மும்மொழித் திட்டம், குழந்தைகள் மீது தேவையற்ற மற்றும் நியாயமற்ற சுமையைச் சுமத்துகிறது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை, இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் மீதான கொடூரமான தாக்குதலாகும். மத்திய அரசு இந்தியா முழுவதும் மற்றொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டுகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam