Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி.. வெற்றிச் சாரல் யார் மீது?

மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி.. வெற்றிச் சாரல் யார் மீது?

Minnambalam 2 years ago

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்எந்தெந்ததொகுதியையார்கைப்பற்றப்போகிறார்கள் என்று நமதுமின்னம்பலம், மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த வகையில் தென் மாவட்டத்தின் முக்கியமானதும் இயற்கை வளம் மிக்கதுமான தென்காசி தொகுதியில் களமிறங்கினோம்.

தென்காசி தொகுதியில்திமுகசார்பில்ராணி ஸ்ரீகுமார்களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிபோட்டியிடுகிறார். பாஜக கூட்டணிசார்பில்தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன்போட்டியிடுகிறார். நாம்தமிழர்கட்சியின்சார்பில்இசை மதிவாணன்போட்டியிடுகிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் என இரு ஆளுமைகள் எதிரெதிரே நிற்கும் இத்தொகுதியின் மீது தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழகத்தின் கவனமும் ஒரு சேர பதிந்துள்ளது.

தென்காசிகளத்தின்நிலவரம்என்ன? உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்என்றகேள்வியினைபரவலாகதென்காசி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம்.

இந்தமக்களவைத்தொகுதிக்குஉட்பட்டஆறுசட்டமன்றத்தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள்என 600 பேரிடம்ஆய்வுசெய்தோம். 18-30 வயதுவரையிலானவாக்காளர்கள், 30-50 வயதுவரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்குமேற்பட்டவாக்காளர்கள்எனமூன்றாகப்பிரித்துஆண்- பெண்எனசமவிகிதத்தில்இந்தகருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.

தென்காசி நாடாளுமன்றத்தொகுதியில்உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளானதென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம், சங்கரன்கோயில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி) பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்…

திமுகவேட்பாளர்ராணி ஸ்ரீகுமார் 44% வாக்குகளைப் பெற்றுதென்காசி தொகுதியில்முன்னிலையில்நிற்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam