தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 21) வெளியானது.
அதன்படி, தென் சென்னை - தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், வேலூர் - ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரி - நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், கோயம்புத்தூர் - அண்ணாமலை, பெரம்பலூர் - பாரிவேந்தர், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் நெல்லையில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

