Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rain Update: இடி, மின்னலோட. ஆறு நாளைக்கு 'மழையும்' உண்டு மக்களே!

Rain Update: இடி, மின்னலோட. ஆறு நாளைக்கு 'மழையும்' உண்டு மக்களே!

Minnambalam 2 years ago

மிழ்நாட்டில் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இன்று (ஏப்ரல் 7 ), தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 8, 9, 1௦, 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகியவற்றில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Good Bad Ugly: இணைந்த தெலுங்கு நடிகர்… ஷூட்டிங் எப்போன்னு பாருங்க!

குறிப்பாக ஏப்ரல் 1௦, 11 தேதிகளில் தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்சமாக சேலத்தில் 41.5° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0°, வேலூரில் 40.8° டிகிரி செல்சியஸ், ஈரோடு மற்றும் தருமபுரியில் 40.7° செல்சியஸ், திருச்சியில் 4௦.5° டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.6° செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 36.7° செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38°-39° டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

Thalapathy 69: மொத்தம் 4 ஹீரோயின்கள்… விஜயுடன் ஜோடி போடப்போவது யார்?

டெல்டா மாவட்டங்கள்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர்.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

கடலோர தமிழக மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

-மஞ்சுளா

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார் ஸ்டாலின்

வாக்கிங், அப்பாயின்மென்ட் ரத்து: முதல்வரின் ஹெல்த் ரிப்போர்ட்!

பாஜக வேட்பாளர்களின் அனைத்து தொகுதிகளிலும் சோதனை: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam