Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rain Update: நோட் பண்ணிக்கங்க மக்களே. தொடர்ந்து நாலு நாளைக்கு மழை இருக்கு!

Rain Update: நோட் பண்ணிக்கங்க மக்களே. தொடர்ந்து நாலு நாளைக்கு மழை இருக்கு!

Minnambalam 2 years ago

மிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (மார்ச் 18) மற்றும் நாளை (மார்ச் 19) ஆகிய இரண்டு தினங்களிலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

மார்ச் 2௦, 21, 22, 23 தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

WPL 2024: எல்லிஸ் பெர்ரி டூ ஸ்ரேயங்கா பாட்டீல்… யாருக்கு எந்த விருது? எவ்வளவு பரிசுத்தொகை?

இன்று தொடங்கி மார்ச் 2௦ வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழகத்தின் உள்பகுதிகளில் வசிப்போருக்கு அசௌகரியங்கள் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

GOLD RATE: 'ஸ்வீட் ஷாக்' கொடுத்த தங்கம் விலை

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தின் கரூர் பரமத்தி 39 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam