Dailyhunt
ஷாக் கொடுத்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

ஷாக் கொடுத்த தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Minnambalam 3 weeks ago

சென்னையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.1120 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,440 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள், தங்கத்தின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று பிற்பகலில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்துள்ளது.

தற்போதைய தங்கம் விலை

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 140 குறைந்த நிலையில் இன்று பிற்பகல் ரூ. 180 வரை உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் காலை ரூ.1,120 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.1400 உயர்ந்து ரூ.1,11,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.115 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.150 உயர்ந்து ரூ.11,670க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் 5 ஆவது நாளாக ரூ. 255க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகலில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு கிராம் ரூ.5000 உயர்ந்து ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

5-4-20261,11,600
4-4-20261,11,600
3-4-20261,10,800
2-4-20261,10,000
1-4-20261,12,400
31-3-20261,09,360
30-3-20261,10,160
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

5-4-2026255
4-4-2026255
3-4-2026255
2-4-2026255
1-4-2026265
31-3-2026250
30-3-2026255
29-3-2026250
28-3-2026250
27-3-2026245
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam