Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்

தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்

Minnambalam 2 years ago

ல்வேறு தடைகளை கடந்து இந்தாண்டு பாரீஸில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார்.

உலகமே ஆவலுடன் காத்திருக்கும் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது.

ஜூலை 26-ம் தேதி துவங்கும் இந்த போட்டியானது ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது.

இதனை முன்னிட்டு மல்யுத்த போட்டிக்கான ஆசியன் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் இன்று தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.

மொத்தம் 18 எடை பிரிவுகளில் நடக்க இருக்கும் போட்டியில் ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி சார்பில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கிய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் ஒருவர் என்பதால் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவாரா என்று சந்தேகம் இருந்தது.

எனினும் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவில் இதுவரை 3 போட்டிகளிலும் பங்கேற்று வென்ற வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடந்த அரையிறுதி போட்டியில் கஜகஸ்தானின் லாராவை வினேஷ் போகத் வீழ்த்தியதன் மூலம் இறுதிப்போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார்.

காயம், பயிற்சியாளர், பிசியோவுக்கு அனுமதி மறுப்பு, மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரான போராட்டம் என பல தடைகளையும் கடந்து தகுதி பெற்றுள்ளார்.

அவரை தொடர்ந்து இந்தியாவின் சார்பில் 57 கிலோ எடை பிரிவில் அன்சூ மற்றும் 76 கிலோ எடை பிரிவில் ரித்திகா ஹூடா ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

தளபதிய விட தலவிதி முக்கியம் பிகிலே : அப்டேட் குமாரு

தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam