Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தலைவர் 171 : ரஜினிக்கு ஜோடி இவங்களா?

தலைவர் 171 : ரஜினிக்கு ஜோடி இவங்களா?

Minnambalam 2 years ago

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படம் தலைவர் 171. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கிறார்.

தலைவர் 171 படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

அந்த போஸ்டரில் ரஜினி கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்க, ஒரு கைதியின் கைகளில் விலங்கு மாட்டிருப்பது போல் ரஜினியின் கைகளில் வாட்ச்கள் மாட்டப்பட்டிருந்தது.

இது வழக்கமான லோகேஷ் ஸ்டைல் படமாக இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், தலைவர் 171 படத்திற்கு "கழுகு" என டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தலைவர் 171 படம் குறித்த ஒரு சூப்பர் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அது என்னவென்றால், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஷோபனாவை நடிக்க வைக்க லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக தலைவர் 171 படத்தில் ஷோபனா நடிக்க உள்ளார் என்ற தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், லியோ படத்தின் டைட்டில் டீசரை போலவே தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசரும் இங்கிலீஷ் ரேப் பாடலுடன் செம மாஸாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஜூன் மாதம் முதல் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தலைவர் 171 படத்தின் தகவல்கள் ஒருபுறம் காட்டு தீ போல் பரவிக் கொண்டு இருக்க, மற்றொருபுறம் தலைவர் 170 "வேட்டையன்" படத்தின் டீஸர் மே மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும், வேட்டையன் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- கார்த்திக் ராஜா

பியூட்டி டிப்ஸ்: முன்னந்தலையில் முடிகள் கொட்டாமல் இருக்க…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam