மக்களவை தேர்தலில் போட்டியிடும் 21 திமுக வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் இன்று (மார்ச் 20) வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் விவரம் :
1) வடசென்னை - டாக்டர். கலாநிதி வீராசாமி
2)மத்திய சென்னை - தயாநிதிமாறன்
3) தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
4) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
5) ஸ்ரீபெரும்புதூர் - டி ஆர் பாலு
6) நீலகிரி - ஆ.ராசா
7) வேலூர் - கதிர் ஆனந்த்
8) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
9) காஞ்சிபுரம் - செல்வம்
10) திருவண்ணாமலை - அண்ணாதுரை
11) தஞ்சாவூர் - முரசொலி
12) பொள்ளாச்சி - ஈஸ்வர சுவாமி
13) சேலம் - செல்வகணபதி
14) கள்ளக்குறிச்சி - மலையரசன்
15) பெரம்பலூர் - அமைச்சர் K.N. நேரு மகன் அருண் நேரு
16) ஈரோடு - பிரகாஷ்
17) ஆரணி - தரணி வேந்தன்
18) கோவை - கணபதி ராஜ்குமார்
19) தென்காசி - டாக்டர். ராணி ஸ்ரீகுமார்
20) தர்மபுரி - ஆ.மணி
21) தேனி - தங்க தமிழ்ச்செல்வன்

இந்த பட்டியலில் மீண்டும் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் தவிர்த்து, 11 புதிய முகங்கள் இந்த மக்களவை தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

