Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
யூடியூப்: அதிகளவில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடு எது தெரியுமா?

யூடியூப்: அதிகளவில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடு எது தெரியுமா?

Minnambalam 2 years ago

யூடியூப்பில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் அதிகளவில் வீடியோக்களை நீக்கிய நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இன்று உலகம் முழுவதும் யூடியூப் தளத்தின் பயன்பாடு அதிக அளவில் இருக்கிறது. சிலர் பொழுதுபோக்குக்காகவும் பலர் வருமானம் ஈட்டுவதற்காகவும் யூடியூப் சேனலைத் தொடங்கி வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். வீடியோக்களைப் பதிவிடுவதற்கு சில விதிமுறைகளும் உண்டு. அதை மீறினால் வீடியோக்களை நீக்குவது மட்டுமின்றி சேனலையும் யூடியூப் நிறுவனம் முடக்கி வருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 22 லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியிருக்கிறது. குறிப்பாகக் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை மட்டும் உலகம் முழுவதும் 9 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியிருக்கிறது. அதில் 96 வீடியோக்கள் யாரும் பார்ப்பதற்கு முன்னரே நீக்கப்பட்டுள்ளன.

மேலும், 2 கோடி சேனல்களை முடக்கம் செய்திருக்கிறது. அதிகளவு வீடியோக்களை நீக்கிய பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூரில் 12 லட்சம் வீடியோக்களும், அமெரிக்கா, இந்தோனேசியாவில் 7 லட்சம் வீடியோக்களும், ரஷ்யாவில் 5 லட்சம் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: கோடையில் மேக்கப் கலையாமல் இருக்க…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam