Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

News7 Tamil 6 years ago

கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். இந்திய விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரின் நலனுக்காகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் உரையாடியுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள புதிய பணி கலாச்சாரம் தொடர்பாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'சுந்தர் பிச்சையுடனான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்தது. விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து விவாதித்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: News7 Tamil