Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் - சங்கீதா இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனரா?

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் - சங்கீதா இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனரா?

Claim

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் - சங்கீதா இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அப்படத்தில் அனிருத்தின் பெற்றோர், காவ்யாவின் பெற்றோர் மற்றும் அனிருத் - காவ்யா தம்பதியினருடன் விஜய் - சங்கீதா ஆகியோர் அருகருகே நின்றுள்ளனர். மேலும், விஜய்யின் கையை சங்கீதா பிடித்திருப்பது போன்றும் அப்படத்தில் காணப்படுகிறது.

47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோல்க்ஸ் வாட்ச் அணிந்திருந்தாரா அமைச்சர் ராஜ்மோகன்?


Fact

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் - சங்கீதா இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் புகைப்படத்தில் சன் நியூஸ் ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் படம் குறித்து தேடினோம்.

அத்தேடலில் அனிருத்தின் பெற்றோர், காவ்யாவின் பெற்றோர் மற்றும் அனிருத் - காவ்யா தம்பதியினருடன் முதல்வர் விஜய் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் சங்கீதா இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து வைரல் படத்தை Hive Moderation, Sightengine, imagedetector, TruthScan உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறியும் இணைய கருவிகள் மூலம் சோதித்தோம்.

அச்சோதனையில் இப்படம் 99 சதவீதம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என முடிவுகள் கிடைத்தன.

 Screengrab from Hive ModerationWebsite Screengrab from Sightengine Website Screengrab from Imagedetector Website Screengrab from TruthScan Website

தொடர்ந்து, சன் நியூஸ் ஊடகத்தின் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜ் செல்லதுரையை தொடர்புக்கொண்டு இதுகுறித்து கேட்டோம். அப்போது, சமூக வலைத்தளங்களில் பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து தேடுகையில் சங்கீதா அனிருத் - காவ்யா தம்பதியினரின் திருமண வரவேற்புக்கு தனியாக வந்ததாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

சங்கீதா தனியாக வரவேற்புக்கு வந்த வீடியோ மற்றும் புகைப்படம் சன் நியூஸ் ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.

அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் - சங்கீதா இணைந்து புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். கிடைத்த ஆதாரங்களின்படி இது தெளிவாகியுள்ளது.

Sources
Instagram Post by Sun Newsdated November 21, 2026
Phone conversation with Manoj Chelladurai, Digital Head, Sun News
Facebook Post by Sun News dated November 21, 2026
Facebook Post by Sun News dated November 21, 2026
Hive Moderation
Sightengine
imagedetector
TruthScan
Report by NDTV dated November 22, 2026
Report by India Today dated November 22, 2026
Report by Deccan Herald dated November 22, 2026

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil