Claim
அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக கலைஞர் செய்திகள் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் த்ரிஷா படம் வைக்கப்பட்டதாக பரவும் எடிட் படம்!
Fact
அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக கலைஞர் செய்திகள் ஊடகம் வெளியிட்ட செய்தி தவறானதாகும்.
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இத்தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
“கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவை அரசாணை (நிலை) எண்.152 பள்ளிக் கல்வித்துறை (பொது.நூ) நாள் 04.07.2017-இன் படி குறிப்பிடப்பட்டுள்ள வாடகைக் கட்டணத்தின் அடிப்படையில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் இல்லாமல் வாடகைக்கு விடப்படுகிறது. மேற்கண்ட அரங்குகளுக்கு எந்தவித கட்டணமும் உயர்த்தப்படவில்லை" என்று அண்ணா நூற்றாண்டு நூலகம் விளக்கமளித்துள்ளதாக தகவல் சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அரங்கங்களின் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக கலையரங்கத்திற்கு 2,31,224 ரூபாயும், குறைந்தபட்சமாக நூல் வெளியீட்டுக் கூடத்திற்கு 2264 ரூபாயும் ஒருநாள் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்ப்பட்டிருந்தது.

Sources
Instagram post by TN Fact Check, Dated June 27, 2026
Anna Centenary Library Website

