Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் த்ரிஷா படம் வைக்கப்பட்டதாக பரவும் எடிட் படம்!

காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் த்ரிஷா படம் வைக்கப்பட்டதாக பரவும் எடிட் படம்!

காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் த்ரிஷா படம் வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

முஸ்லீம் பெண்ணை ஜெய் ஸ்ரீராம் என்று கூற சொல்லி தாக்கிய இந்துத்துவ கும்பல் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் த்ரிஷா படம் வைக்கப்பட்டதாக பரவும் படத்தில் பாலிமர் நியூஸ் ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதால் அந்த ஊடகத்தின் சமூக ஊடக பக்கங்களில் அப்படம் குறித்து தேடினோம்.

அத்தேடலில் "திரிஷா PHOTO வைங்க.." மாமன்றத்தில் கவுன்சிலர் THUG LIFE.. SM ல் வீடியோ வைரல்.." என்று தலைப்பிட்டு பாலிமர் நியூஸ் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் படங்களை நகராட்சி மாமன்றத்தில் வைக்க அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் போட்டியிட்ட நிலையில், காரைக்குடி சுயேட்சை கவுன்சிலர் நடிகை த்ரிஷா படத்தையும் வைக்க வேண்டும் என்று வேடிக்கையாக பேசுவதை காண முடிந்தது. ஆனால் அவ்வீடியோவில் த்ரிஷா படத்தை மாட்டியதாக காட்சி இடம்பெற்றிருக்கவில்லை.

இதனையடுத்து பாலிமர் நியூஸின் டிஜிட்டல் பொறுப்பாளர் சுரேந்தரை தொடர்புக்கொண்டு வைரலாகும் படம் குறித்து விசாரித்தோம். அவர் அப்படம் எடிட் செய்யப்பட்ட போலியானபடம் என்று தெரிவித்தார்.

வைரலாகும் படத்தை கூர்ந்து கவனிக்கையில் நடிகை த்ரிஷா படத்தை தனியாக ஒரு கை தாங்கி பிடித்திருப்பதை காண முடிந்தது.

Fake Image Detector இணைய கருவி மூலம் அப்படத்தை சோதிக்கையில் அப்படம் எடிட் செய்யப்பட்டது என முடிவு வந்தது.

 Screengrab from Fake Image Detector

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது.

Trisha-Vijay: விஜய்யை 'அண்ணன்' என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாரா திரிஷா?

Conclusion

காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் த்ரிஷா படம் வைக்கப்பட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான படமாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
YouTube Video from Polimer News, Dated June 24, 2026
Phone conversation with Surendhar, Polimer News
Fake Image Detector
Self Analysis

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil