திமுகவின் இளைஞரணி ஆலோசனை கூட்டம் அண்மையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.
அக்கூட்டத்தில் இனிமேல் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று பரவி வருகின்றது.

கோவை சிறுமி கொ* வழக்கு குறித்து திமிராக பதிலளித்தாரா தவெக அமைச்சர் அருண்ராஜ்?
Fact Check/Verification
இனிமேல் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வில் இத்தகவல் பொய்யானது என்றும், வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டு என்றும் தெரிய வந்துள்ளது.
வைரலாகும் நியூஸ்கார்டில் 'மே 24, 2025' என்று சென்ற வருடத்தின் தேதி காணப்பட்டது.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைரலாகும் நியூஸ்கார்டில் சன் நியூஸ் ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருப்பதால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டை சன் நியூஸ் ஊடகம் வெளியிட்டதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. ஆனால் அந்த நியூஸ்கார்டுடன் ஒற்றுப்போகும் இரண்டு வீடியோ செய்திகளை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதன்படி பார்க்கையில் இந்த செய்திகளின் ஏதேனும் ஒரு காட்சியை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.

இதனைத் தொடர்ந்து இதை உறுதி செய்ய சன் நியூஸ் ஊடகத்தின் டிஜிட்டல் தலைவர் மனோஜ்பிரபு செல்லதுரையை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என உறுதி செய்தார்.
சன் நியூஸ் ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ஸ்டாலின் பேசிய உரையின் முழு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அந்த உரையில் பாஜக குறித்து எந்த ஒரு இடத்திலும் ஸ்டாலின் பேசி இருக்கவில்லை.
முதலமைச்சர் விஜய் அவரது மகன் ஜேசன் சஞ்சயுடன் இருக்கும் படம் உண்மையானதா?
Conclusion
இனிமேல் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என்று முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram posts by Sun News, dated May 24, 2026
YouTube video by Sun News, dated May 23, 2026
Phone conversation with Manojprabhu Selladurai, Digital Lead, Sun News
Self Analysis

