Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கர்ப்பிணி வேடமிட்ட கொரிய இளைஞர் இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா?

கர்ப்பிணி வேடமிட்ட கொரிய இளைஞர் இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா?

ர்ப்பிணி வேடமிட்ட கொரிய இளைஞர் இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வைரலாகும் வீடியோவில் கொரிய இளைஞர் கர்ப்பிணி வேடமிட்டு சாலையில் நடப்பதையும், ஹோலி பண்டிகை கொண்டாடும் இளைஞர்கள் அவர்மீது வண்ணம் பூசும்போது அவர் கத்துவதையும் காண முடிகின்றது.

அண்ணா நூலகத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவும் தவறான தகவல்!

Fact Check/Verification

கர்ப்பிணி வேடமிட்ட கொரிய இளைஞர் இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை அவ்வீடியோ தொடர்பாக ஆராய்ந்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இளைஞர் பெயர் சுமின் என்பதும், அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து அது தொடர்பான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றார் என்பதும் அறிய முடிந்தது.

சுமினின் யூடியூப் பக்கத்தில் அவர் கர்ப்பிணி வேடமிட்ட வீடியோ ஏப்ரல் 11, 2026 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவானது பங்களாதேசத்தில் எடுக்கப்பட்டதாக சுமின் அவ்வீடியோவில் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வீடியோவில் ஹோலி காட்சிகள் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆகவே இதை தொடர்ந்து ஹோலி வீடியோவை தேடினோம். அத்தேடலில் மே 16, 2025 அன்று இவ்வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் வாரணாசியில் ஹோலி பண்டிகையின்போது அவ்வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி பார்க்கையில் இரு வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களின் காட்சிகளை ஒன்றாக இணைத்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது.

தொடர்ந்து தேடுகையில் யூடியூபர் சுமினும் வைரலாகும் வீடியோ தொடர்பாக விளக்கமளித்து அவரது த்ரெட்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

அப்பதிவில் கர்ப்பிணி வேடமிட்டிருப்பது பங்களாதேசத்தில் என்றும், ஹோலி வீடியோவில் இந்தியாவில் எடுக்கப்பட்டது; அச்சமயத்தில் எவ்வித வேடமும் இல்லாமல் அவராகவே இருந்தார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தனது இருவேறு வீடியோக்களை ஒன்றாக இணைத்து இந்தியாவிற்கு எதிராக தவறாக பரப்பப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது வீடியோக்களை இவ்வாறு தவறாக மாற்றி எடிட் செய்து பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பறப்பதாக கூறி மலையிலிருந்து குதித்த சாமியார் மரணித்தாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

கர்ப்பிணி வேடமிட்ட கொரிய இளைஞர் இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். வங்கதேச வீடியோவை இந்திய வீடியோவுடன் இணைத்து இந்த பொய் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
YouTube Video from Sumin, Dated April 11, 2026
YouTube Video from Sumin, Dated May 16, 2025
Thereads Post by Sumin, Dated June 06, 2026

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil