Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிஜேபி போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஊடுருவி காருக்கு தீ வைக்க முயன்றனரா?

சிஜேபி போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஊடுருவி காருக்கு தீ வைக்க முயன்றனரா?

சிஜேபி போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஊடுருவி காருக்கு தீ வைக்க முயன்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசினரா? உண்மை என்ன?

Fact Check/Verification

சிஜேபி போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஊடுருவி காருக்கு தீ வைக்க முயன்றதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் வைரல் வீடியோவில் காணப்படும் சம்பவம் பீகாரில் நடந்ததாக CNN-News18 ஊடகம் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் விபத்து ஏற்படுத்திய காரை பொதுமக்கள் முயற்சித்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Money Control ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதே தகவலுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் டைனிக் பாஸ்கர் ஊடகத்தில் பீகாரின் கயா மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டு செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

வீடியோவில் காணப்படும் கார் ஆட்டோ ரிக்ஷா மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் , இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு கடுமையாக அடிப்பட்டதாகவும், இதன் காரணமாக கோபமடைந்த பொதுமக்கள் அந்த காரை உடைத்து சேதப்படுத்தியதுடன் சிலர் அக்காரை தீ வைத்து கொளுத்த முயற்சித்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரல் வீடியோவுக்கும் சிஜேபி போராட்டத்துக்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.

டெல்லி CJP போராட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தாரா?

Conclusion

சிஜேபி போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஊடுருவி காருக்கு தீ வைக்க முயன்றதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

பீகாரில் விபத்து ஏற்படுத்திய காரை பொதுமக்கள் சேதப்படுத்திய சம்பவமே இவ்வாறு திரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பரப்பப்படுகின்றது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
Instagram Post By CNN-News18, Dated July 17, 2026
Instagram Post By Money Control, Dated July 17, 2026
Report By Dainik Bhaskar, Dated July 16, 2026

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil