Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிஜேபி போராட்டத்துக்கு பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஆதரவு தெரிவித்ததா?

சிஜேபி போராட்டத்துக்கு பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஆதரவு தெரிவித்ததா?

டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெறும் சிஜேபி போராட்டத்துக்கு பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஆதரவு தெரிவித்ததாக கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சிஜேபி போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஊடுருவி காருக்கு தீ வைக்க முயன்றனரா?

Fact Check/Verification

சிஜேபி போராட்டத்துக்கு பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஆதரவு தெரிவித்ததாக கடிதம் ஒன்று பரவியதை தொடர்ந்து அக்கட்சியின் சமூக ஊடக பக்கங்களில் அக்கடிதம் குறித்து தேடினோம்.

அத்தேடலில் வைரலாகும் கடிதம் போலியானது என்று பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் மறுப்பு தெரிவித்துப் பதிவிட்டுள்ளதை காண முடிந்தது.

அப்பதிவில், பரப்பப்படும் கடிதத்தில் கட்சியின் பெயரே தவறாக அச்சிடப்பட்டிருப்பதோடு, அதிகாரப்பூர்வ முகவரி, குறிப்பு எண் (Reference Number) மற்றும் உண்மையான கடிதத் தாள் வடிவமைப்பு எதுவும் இல்லை என்பதால் அது புனையப்பட்டது என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதே கட்சியின் உறுதியான கொள்கை; கட்சியின் நற்பெயரைக் கெடுக்க இத்தகைய பொய் பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பப்படுகின்றது; தவறான நோக்கம் கொண்ட இந்த மோசடிச் செயலுக்கு தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு, அதைக் கடுமையாகக் கண்டிக்கின்றது. எனவே, இப்போலி கடிதத்தைப் பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், ஊடகங்கள் எந்தவொரு செய்தியையும் வெளியிடும் முன் தங்கள் மத்திய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைரலாகும் கடிதத்தை கவனிக்கையில் பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி மறுப்பு பதிவில் கூறியதுபோல் கட்சியின் பெயரே அக்கடிதத்தில் காணப்பட்ட லோகோவில் பிழையாக எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து SightengineUndetectable AI, Image Detector உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு அறியும் கருவி மூலம் வைரலாகும் கடிதத்தின் படத்தை சோதித்தோம்.

அச்சோதனையில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என முடிவு வந்தது.

 Screengrab from Sightengine Website Screengrab from Undetectable AI Website Screengrab from Image Detector Website

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசினரா? உண்மை என்ன?

Conclusion

சிஜேபி போராட்டத்துக்கு பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஆதரவு தெரிவித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான கடிதத்தை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது. பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் வைரலாகும் கடிதம் போலியானது என்று மறுத்துள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Sources
X Post By Bangladesh Jamaat-e-Islami, Dated July 21, 2026
Sightengine
Undetectable AI
Image Detector

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil