Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் பிறந்தநாளில் சிறுவன் கையில் தீ பற்றியது; இச்சம்பவம் அண்மையில் நடந்ததா?

விஜய் பிறந்தநாளில் சிறுவன் கையில் தீ பற்றியது; இச்சம்பவம் அண்மையில் நடந்ததா?

Claim

முதலமைச்சர் விஜய் இன்று தனது 52 ஆவது பிறந்தாளை கொண்டாடும் நிலையில், அவரின் பிறந்த நாள் விழாவில் சிறுவன் கையில் தீ பற்றியதாக வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர்களை பொதுவெளியில் போலீசார் அடித்தனரா?


Fact

விஜய் பிறந்தநாளில் சிறுவன் கையில் தீ பற்றியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் இச்சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2024 ஆம் ஆண்டில் நடந்தது என்று தினமலர் செய்தியின் மூலம் அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் 2024 ஜூனில் ஈடிவி பாரத், நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடக்கவில்லை; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பது உறுதியாகின்றது.

Sources
Report by Dinamalar, dated June 22, 2024
Report by ETV Bharat, dated June 22, 2024
Report by News 18, dated June 22, 2024

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil