Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விஜய் மனைவி சங்கீதா ஜனநாயகன் படம் பார்க்க வந்தாரா?

விஜய் மனைவி சங்கீதா ஜனநாயகன் படம் பார்க்க வந்தாரா?

Claim

விஜய் மனைவி சங்கீதா ஜனநாயகன் படம் பார்க்க வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சிஜேபி போராட்டத்துக்கு பங்களாதேஷ் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஆதரவு தெரிவித்ததா?


Fact

சங்கீதா ஜனநாயகன் படம் பார்க்க வந்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ தொடர்பாக தேடினோம்.

அத்தேடலில் "வெற்றி தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வந்த நடிகர் விஜய் மனைவி சங்கீதா" என்று குறிப்பிட்டு வைரலாகும் இதே வீடியோ நியூஸ் தமிழ் ஊடகத்தில் ஜூலை 14, 2023 அன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இந்தியாகிளிட்ஸ் தமிழ், சினி உலகம் உள்ளிட்ட டியூப் பக்கங்களிலும் சங்கீதா மாவீரன் படத்தை பார்க்க வந்ததாக கூறி இதே வீடியோவை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் சங்கீதா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தை பார்க்க வந்த வீடியோவே ஜனநாயகன் படத்தை பார்க்க வந்ததாக தவறாக பரப்பப்படுகின்றது என தெளிவாகின்றது.

Sources
Youtube video by News Tamil, Dated July 14, 2023
Youtube video by Indiaglitz Tamil, Dated July 14, 2023
Youtube video by Cine Ulagam, Dated July 14, 2023

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newschecker.in Tamil