அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தகங்களை மேற்கொண்டிருப்பதாகவும், இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பங்கு வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிபராக மீண்டும் பொறுப்பேற்றது முதல், 'அமெரிக்காவுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வரி விதிப்பு, குடியுரிமை, விசா கட்டுப்பாடுகள், வெனிசுலா அதிபர் கைது, பிற நாடுகள் பற்றிய சர்ச்சைப் பேச்சுகள், ஈரான் மீது போர் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தகங்களை மேற்கொண்டிருப்பதாகவும், இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த பங்கு வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர்.
டொனால்டு ட்ரம்ப்அந்த வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ட்ரம்ப் ஒருநாளைக்குச் சராசரியாக 40க்கும் மேற்பட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளார் என முன்னணி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா | "பாகிஸ்தானுக்கு செய்த உதவி" - போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்!2025-ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் சுமார் 380 வர்த்தகங்கள் வெளியிடப்பட்டிருந்த முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், இது ஒரு வியத்தகு உயர்வாகும் என அது தெரிவித்துள்ளது. என்விடியா, ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட், போயிங், காஸ்ட்கோ உள்ளிட்ட நிறுவனங்களில் சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை அதிபர் ட்ரம்ப் வாங்கியுள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 10 அன்று, ட்ரம்ப் மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் அமேசான் நிறுவனங்களில் 5 மில்லியன் முதல் 25 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான மதிப்புள்ள தனது பங்குகளை விற்றது வெளிப்படுத்தப்பட்ட மிகப்பெரிய பரிவர்த்தனைகளில் ஒன்றாகும்.
ட்ரம்ப்இந்த நிறுவனங்களில் பல, அமெரிக்க அரசாங்கக் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் புவிசார் அரசியல் முடிவுகளால் நேரடியாகப் பாதிக்கப்படும் துறைகளில் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தகத்தில் சட்டங்கள் எதுவும் மீறப்படாவிட்டாலும்கூட, பதவியில் இருக்கும் ஓர் அதிபரின் இத்தகைய தீவிரமான வர்த்தகச் செயல்பாடு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. தன்னுடைய பதவியை தவறாகப் பயன்படுத்தி அவர் லாபம் பார்க்கிறாரா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நாட்டின் அதிபர் இவ்வளவு தீவிரமாகப் பங்குச் சந்தையில் ஈடுபடுவது வரலாறு காணாத ஒன்று எனச் சொல்லும் வல்லுநர்கள், இது ஒரு தனிநபரின் கணக்குபோல இல்லாமல், Algo trading மூலம் இயங்கும் ஒரு பெரிய ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனம் செய்யும் வர்த்தகம் போல இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஊடக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகமே உற்றுநோக்கிய எதிர்பார்ப்பு.. ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு.. பேசியது என்ன?
