Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ட்ரம்ப் போடும் புதிய திட்டம்.. இந்திய மாணவர்களுக்கு பேரிடி.!

ட்ரம்ப் போடும் புதிய திட்டம்.. இந்திய மாணவர்களுக்கு பேரிடி.!

மெரிக்காவில் படிப்பு முடித்து அங்கு வேலை செய்யும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் OPT விசாவுக்கு 1 லட்சம் டாலர் (சுமார் 96 லட்சம் ரூபாய்) கட்டணம் விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் அமலானால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என அச்சம் நிலவுகிறது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்புக்குப் பிறகு அங்குப் பணியாற்ற வழங்கும் 'OPT' விசாக்களுக்கு ஒரு லட்சம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 96 லட்சம் ரூபாய் கட்டணம் விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 H1b visa

ஏற்கெனவே ஹெச்-1பி விசாக்களுக்கு இதே போன்ற கட்டணத்தை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இந்த புதிய நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது. இக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்படும்.

தொடர்ந்து H-1B, மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு செயல்முறைகளை மேலும் கடுமையாக்கக்கூடிய விசயங்களை ட்ரம்ப் அரசு முயன்றுகொண்டே இருக்கிறது.

'காசா மக்கள் பலியாவதைத் தடுக்க ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்..' - ஹமாஸ்
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai