Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம்" - விஜய்க்காக சிபி சத்யராஜ் போட்ட பதிவு!

"நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம்" - விஜய்க்காக சிபி சத்யராஜ் போட்ட பதிவு!

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வரலாறு காணாத வாக்குசதவீதத்துடன் அசத்தும் நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் எக்ஸ் தளத்தில் "நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்" என்று பதிவிட்டு தனது பேரானந்தத்தை வெளிப்படுத்தினார்.

முன்பே "வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்" என விஜய்க்கு கடிதம் எழுதியிருந்தார்.

நடிகரும் சத்யராஜின் மகனுமான சிபி சத்யராஜ் விஜயின் அரசியல் வருகையை வரவேற்றதோடு, தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை எழுதி வந்தார். அவரது குடும்பத்தில் சத்யராஜ் மற்றும் அவரது சகோதரி திவ்யா ஆகியோர் திமுகவுக்கு ஆதரவளித்தனர்.

 சிபிராஜ், விஜய்

ஆனால் சிபி சத்யராஜ் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேர்தல் நாளுக்கு முன்பாக விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக "வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்" என்று கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

TNElection2026 | 6 இடங்களில் தவெக வெற்றி.. வரலாறு காணாத வாக்குசதவீதம்!

விஜய்யின் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில் நடிகர் சிபி ராஜ், தன்னுடைய மகிழ்ச்சியை எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய பதிவில் "நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்!" என பதிவிட்டுள்ளார்.

மேலும் 'தற்போது அதிக மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் ரசிகர் சிபி சத்யராஜ்' தான் என ஒருவர் பதிவிட்டதற்கு, அதற்கு 100 சதவீதம் என பதிலளித்துள்ளார் சிபி.

அதேபோல இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் ஜீவா உள்ளிட்டோரும் பதிவிட்டுள்ளனர்.

விஜய் அண்ணாவுக்கு கடிதம்| "வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்.." - சிபி சத்யராஜ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai