Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரூ.1.7 லட்சம் 'துண்டு விழும்' அமெரிக்க வாக்காளர்களுக்கு ஈரான் விடுத்த warning!

ரூ.1.7 லட்சம் 'துண்டு விழும்' அமெரிக்க வாக்காளர்களுக்கு ஈரான் விடுத்த warning!

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்க இடைத்தேர்தலுக்கு (Midterms) முன்பாக, ஈரான் அமெரிக்க வாக்காளர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் செய்தியையும் விடுத்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) ஆகியோர் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால், அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் உயரும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

 Mohammad-Bagher Ghalibaf,

சபாநாயகர் காலிபாப் ஹாலிவுட் திரைப்படமான 'தி மேட்ரிக்ஸ்'-ஐ மேற்கோள் காட்டி, "10 நச்சு மாத்திரைகள் (Poisonous Pills)" என்ற உவமையைப் பயன்படுத்தியுள்ளார். இதில் 'சிகப்பு இல்லை, நீலம் இல்லை, அனைத்தும் சாம்பல்' எனக் குறிப்பிட்டு, அமெரிக்க வாக்காளர்கள் தங்களின் அரசியல் மாயையை உடைத்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிபர் டொனால்டு ட்ரம்பின் போர்க்குணமிக்க கொள்கைகளையும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவையும் வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று ஈரான் கோரியுள்ளது. ட்ரம்ப் அமெரிக்க மக்களை ஏமாற்றி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

போர் எட்டு மாதங்களாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 2,000 டாலர் (சுமார் ரூ.1.7 லட்சம்) கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுவதாக IRGC யின் அறிக்கை தெரிவிக்கிறது. போரின் மொத்த பொருளாதார தாக்கம் 265 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 donald trump

இதில் மட்டும் ஒரு குடும்பத்திற்கு சுமார் 1,100 டாலர் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான் அரசு அமெரிக்க மக்களைத் தங்களின் எதிரியாகப் பார்க்கவில்லை என்றும், வாஷிங்டனின் ஊழல் மலிந்த அரசியல்வாதிகளே இரு நாட்டு மக்களின் துயரத்திற்கும் காரணம் என்றும் 25 பக்கங்கள் கொண்ட திறந்த கடிதத்தில் IRGC குறிப்பிட்டுள்ளது.

ஹவுதி தாக்குதலால் அதிரும் சவுதி.. அராம்கோ ஊழியர்கள் வெளியேற்றம்!!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai