Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெகவின் அரசியல் மூளை.. யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி..?

தவெகவின் அரசியல் மூளை.. யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி..?

வெறும் தேர்தல் ஆலோசகரைத் தாண்டி, ஒரு கட்சியின் உருவாக்கம் முதல் உட்கட்சி விதிகள், அன்றாட செயல்பாடுகள் வரை தீர்மானிக்கும் ஒற்றை அதிகார மையமாக ஜான் ஆரோக்கியசாமி செயல்படுகிறார்.

"திமுக கொள்கை எதிரி, பாஜக அரசியல் எதிரி" போன்ற முழக்கங்கள், "திமுக ஒரு தீய சக்தி" என்ற பார்வை ஆகியவை இன்றைய தலைமுறைக்கு சென்று சேர ஜான் வகுத்த திட்டங்களாகக் கூறப்படுகின்றன; விஜயின் முழு நம்பிக்கையும் அவர்மீதே உள்ளது.

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அரசியலில் தேர்தல் வியூக நிறுவனங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தன. தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகோலு போன்ற முன்னணி வியூக வகுப்பாளர்கள் வரிசையில், தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' மூலம் பெரும் கவனம் ஈர்த்திருப்பவர் ஜான் ஆரோக்கியசாமி.

 vijay - john arokiasamy

2016இல் அன்புமணி ராமதாஸுக்கு "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற வியூகம், சீமானின் "எளிய மக்களின் புரட்சி" எனப் பல்வேறு அரசியல் களங்களில் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஜான் ஆரோக்கியசாமி. மும்பையில் தாக்கரே, கர்நாடகாவில் சித்தராமையா, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என ஜான் ஆரோக்கியசாமியின் தொடர்புகள் இந்தியா முழுவதும் பரந்துவிரிந்துள்ளன.

ஸ்டாலினை தோற்கடித்த தவெக வேட்பாளர்.. யார் இந்த வி.எஸ்.பாபு?

பொதுவாக, மற்ற கட்சிகளில் வியூக அமைப்பாளர்கள் வெறும் தேர்தல் கால ஆலோசகர்களாக மட்டுமே செயல்படுவார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் ஜானின் பங்கு மிக விரிவானது. ஒரு கட்சி எப்படி உருவாக வேண்டும் என்பது தொடங்கி, உட்கட்சி விதிகள், அன்றாடச் செயல்பாடுகள் வரை அனைத்தையும் தீர்மானிக்கும் 'ஒற்றை அதிகார மையமாக' இவர் விளங்குவதாகக் கூறுகின்றனர்.

 vijay - john arokiasamy

விஜய்யின் அரசியல் நகர்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் "திமுக கொள்கை எதிரி, பாஜக அரசியல் எதிரி" என்ற முழக்கத்தையும், "திமுக ஒரு தீய சக்தி" என்ற பார்வையையும் இன்றைய தலைமுறைக்கு ஏற்பக் கொண்டு சேர்த்ததும் ஜானின் திட்டங்களே என்கின்றனர். "எதுவாக இருந்தாலும் ஜானிடம் பேசுங்கள்; அவர் முடிவே இறுதியானது" எனத் தனது நிர்வாகிகளிடம் கூறும் அளவிற்கு ஜான் ஆரோக்கியசாமி மீது விஜய் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார் என கூறுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai