Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வயதானவர்கள் நடக்க சிரமப்படுவது ஏன்? ஆச்சரியம் அளிக்கும் புதிய ஆய்வு முடிவு!

வயதானவர்கள் நடக்க சிரமப்படுவது ஏன்? ஆச்சரியம் அளிக்கும் புதிய ஆய்வு முடிவு!

முதியவர்கள் நடக்கவே சிரமப்படுவதும், சோர்வடைவதும் ஏன் என்பதற்கு, ஆச்சரியமான காரணத்தை புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பிளிண்டர்ஸ் மற்றும் கான்பெர்ரா பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வு, Gait & Posture என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒருவருக்கு வயதாகும்போது அவரது கணுக்கால் இயக்கவியலும், நடைச் சுழற்சியில் தசை இணக்கச் செயல்பாடும், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாறுகின்றன.

அதாவது, சீராகவும் திறம்படவும் நடப்பதை விட, கீழே விழுந்துவிடாமல் இருப்பதிலேயே நமது உடல் அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால், இதற்கு அதிக ஆற்றல் செலவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, நமது உடற்பயிற்சிகள் வெறும் வலிமை பெறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதாக அல்லாமல், உடல் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டுமென்கிறார். பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோடி லிண்ட்சே.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Puthiya Thalaimurai