Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாஜகவுடன் தான் பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கின்றது : புதுச்சேரி ரங்கசாமி விளக்கம்

பாஜகவுடன் தான் பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கின்றது : புதுச்சேரி ரங்கசாமி விளக்கம்

Samayam Tamil 2 months ago

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக தான் கூட்டணி என சில வாரங்களுக்கு முன்பே மீண்டும் உறுதியானது.

பிரதமர் மோடி கூட தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் கலந்துகொண்டு மேலும் இதனை உறுதிப்படுத்தினார். இதையடுத்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் பாஜகவினர் கலந்து பேசி தொகுதிப்பங்கீடு குறித்து முடிவெடுப்பார்கள் என நினைத்தால் அதற்குள் எதிர்பாராத விதமாக இக்கூட்டணிக்கு இடையே பிரச்சனை எழுந்ததாக சொல்லப்படுகின்றது.

ஒரு சில தினங்களுக்கு முன்பு பாஜகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்தார் ரங்கசாமி. ஜோஸ் சார்லஸ் மார்டினை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொள்ள முடிவெடுத்தார்களாம். அந்த முடிவை ரங்கசாமி எதிர்த்திருக்கின்றார். இதனால் தான் இக்கூட்டணிக்குள் பிரச்சனை எழுவதற்கு காரணம் என சொல்லப்படுகின்றது.

ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விரும்பவில்லையாம். ஆனால் பாஜகவினர் லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கவேண்டும் என்கிறார்களாம். இதுவே இவர்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்து வருகின்றதாக சொல்லப்படுகின்றது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாஜக கூட்டணியில் இருந்து விலகவுள்ளார் என்றும் விஜய்யின் தவெக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்றும் தகவல்கள் வந்தன.

எனவே ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் இம்முறை புதுச்சேரியில் தவெகவுடன் கூட்டணி அமைப்பார்கள் என பரவலாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியே கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் திருசெண்டூர் முருகர் கோவிலில் தரிசனம் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி. அப்போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்தார்கள்.

அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி கேட்டார்கள். தவெகவுடன் கூட்டணியா ? அல்லது பாஜகவுடன் தான் கூட்டணியா ? என ரங்கசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரங்கசாமி, நாங்கள் இப்பொது பாஜக கூட்டணியில் தான் இருக்கின்றோம், அவர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் என தெரிவித்தார். இதன் மூலம் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உறுதியாகிவிட்டது.

மேலும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே இருந்த பிரச்சனைக்கும் சுமுகமான முடிவு எட்டப்படும் என இதன் மூலம் தெரிய வருகின்றது. ஆனால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவுடன் இணைவாரா ? அப்படி இணைந்தால் அதனால் ரங்கசாமிக்கு எந்த பிரச்சனையும் இல்லையா ? என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் தற்போதைய நிலவரப்படி ரங்கசாமி பாஜகவுடன் தான் பேச்சுவார்த்தை செய்து வருகின்றார் என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது.

மிக விரைவில் ரங்கசாமிபாஜகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரி அரசியலில் சலசலப்பு நீடித்துக்கொண்டே வருகின்றது. ஒருபக்கம் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே குழப்பம் நிலவி வருகின்றது. மறுபக்கம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு மற்றும் தலைமை குறித்தான குழப்பங்கள் போய்க்கொண்டு இருக்கின்றதாம். மறுபக்கம் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே வேறு ஒரு பிரச்சனை இருப்பதாக தெரிகின்றது. லட்சிய ஜனநாயக கட்சியுடனான கூட்டணி குறித்தான பிரச்சனை தான் என்.,ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போய்க்கொண்டு இருக்கின்றதாம். இதற்கு பாஜக விரைவில் சுமுகமான முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.



லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் இடையே நட்புறவு ஏற்படுமா ? றன பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்படி அவர்களுக்குள் நட்புறவு ஏற்படவில்லை என்றால் பாஜக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒன்று ரங்கசாமியா ? அல்லது ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சியா ? என்ற முடிவை பாஜக எடுக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil