Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"எது..மன்மத நன்றியா?"   கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவால் பேரவையில் சிரிப்பலை - வைரலாகும் கனிமொழி ரியாக்ஷன்

"எது..மன்மத நன்றியா?" கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவால் பேரவையில் சிரிப்பலை - வைரலாகும் கனிமொழி ரியாக்ஷன்

Samayam Tamil 3 weeks ago

மிழக சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.

அதே நேரத்தில், சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு இடையே அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கூறிய ஒரு வார்த்தை தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

"மன்மத நன்றி" என சொல்லி சிரித்த எம்.எல்.ஏ

கள்ளக்குறிச்சி தொகுதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அருள் விக்னேஷ், தனது உரையை நிறைவு செய்யும் போது வணக்கம் தெரிவித்தார்.அப்போது, "மனமார்ந்த நன்றி" என்று கூறுவதற்குப் பதிலாக, தவறுதலாக "மன்மத நன்றி"என சொல்ல வந்தார். தனது தவறை உணர்ந்த அவர் உடனடியாக சிரித்தார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பும் சிரிப்பலையும் ஏற்பட்டது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனது தவறை உணர்ந்து சிரித்ததுடன், அவையில் இருந்த உறுப்பினர்களிடையேயும் இந்த சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியது.

கனிமொழி எம்.எல்.ஏவின் ரியாக்ஷன் வைரல்

இதற்கிடையே, அருள் விக்னேஷுக்கு முன்பு அமர்ந்திருந்த எம்.எல்.ஏ கனிமொழி, அவர் தவறாக சொல்ல வந்ததை உணர்ந்து அளித்த ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அருள் விக்னேஷ் கூறிய வார்த்தையைக் கேட்டவுடன் கனிமொழி வெளிப்படுத்திய முகபாவனை தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

தவெக எம்.எல்.ஏக்களின் வாசிப்பு குறித்து மீண்டும் விமர்சனம்

தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உரைகளை வாசிக்கும்போது எழுத்துப்பிழைகள் மற்றும் வாக்கியப் பிழைகள் செய்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கூறிய "மன்மத நன்றி" என்ற வார்த்தையும் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தஎம்.எல்.ஏக்கள் இந்த வார்த்தையைக் கேட்டு சிரித்த சம்பவமும் கவனம் பெற்றுள்ளது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு வரும் நிலையில், "தவெக உறுப்பினர்கள் இன்னும் எத்தனை முறை இப்படிப் பிழையுடன் சட்டப்பேரவையில் வாசிக்கப் போகிறார்கள்?" என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால், சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த சுவாரஸ்யமான சம்பவம் அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil