Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நேபாள வெள்ளத்தை அன்றே கணித்தேன்.." சீமான் பேச்சால் இணையத்தில் சலசலப்பு

"நேபாள வெள்ளத்தை அன்றே கணித்தேன்.." சீமான் பேச்சால் இணையத்தில் சலசலப்பு

Samayam Tamil 3 weeks ago

துரையில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் பாளையக்காரர் பூலித்தேவர், தமிழ் தேசிய போராளி தமிழரசன் மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த அனிதா ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் மூவர் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், சட்டப்பேரவையில் பேரவை உறுப்பினர்கள்நடந்துகொள்ளும் விதம் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

"நான் சொன்னது யாருக்குமே புரியவில்லை"

தொடர்ந்து, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து பேசிய சீமான், இயற்கை பேரிடர்கள் தொடர்பாக தான் ஏற்கனவே எச்சரித்து வந்ததாகக் கூறினார்.


அவர் பேசுகையில், "நான் போதிக்கும்போது உங்களுக்கு நான் சொல்வது எதுவும் புரிவதில்லை. பாதிக்கப் போகிறதுதான் தெரியும் என்று பலமுறை கூறியிருக்கிறேன். நேபாளில் வெள்ளம் வந்து இறந்த பிறகு, நான் பேசியதை வெட்டி இப்போது போடுகிறார்கள். அமெரிக்க விஞ்ஞானிகள் நேபாள வெள்ளத்தைச் சொல்வதற்கு முன்பே அரணையூர் விஞ்ஞானி நான் சொன்னது யாருமே கேட்கவில்லை. நம்மாழ்வார் எழுதியதைப் படித்துதான் தெருத்தெருவாகக் கத்தினேன்" எனத் தெரிவித்தார்.

நேபாள வெள்ளம் தொடர்பாக தான் முன்கூட்டியே பேசியதாக சீமான் கூறிய இந்தக் கருத்துகள் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நேபாள வெள்ளம் தொடர்பான சீமானின் பேச்சு

சில தினங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கியதாகவும், அவர்களில் சிலர் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேபாள வெள்ளத்தை தான் முன்கூட்டியே கணித்ததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது தற்போது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. இயற்கை பேரிடர்கள் குறித்து சீமான் முன்பு தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரது தற்போதைய பேச்சும் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அமெரிக்காவில் என்னை பாஸ் என்றுதான் அழைப்பார்கள்"

மேலும் அவர் பேசுகையில், அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தியபோது, "உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளார்கள்?" என்று கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் தன்னை அனைவரும் "பாஸ்" என்றுதான் அழைப்பார்கள் என்றும் சீமான் கூறினார்.

அமெரிக்கர்கள் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன என்று தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு பதிலளித்த சீமான், "கொள்கையை சொன்னால் என் கட்சியில் சேர்ந்து விடுவீர்களா?" என்று அவர்களிடம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தான் தமிழக முதல்வராக இருந்திருந்தால் கர்நாடகாவில் தமிழர்களைச் சுட வேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வந்திருக்காது எனக் கூறினார். "சுற்றி விட்டு இந்த நிலத்திற்கு மாநில முதல்வர் வந்திருக்க முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ்காரர்கள் அவருக்கு வரவேற்பு பேனர் வைத்திருக்க முடியுமா என்றும் சுட்டிக்காட்டினார்.

பூலித்தேவர் நினைவேந்தல் நிகழ்வில் சீமான் பேசிய பல்வேறு கருத்துகள் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், குறிப்பாக நேபாள வெள்ளத்தை முன்கூட்டியே கணித்ததாக அவர் கூறிய கருத்து இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil