Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பு வயது! - எண் கணித விதி என்ன சொல்கிறது?

கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பு வயது! - எண் கணித விதி என்ன சொல்கிறது?

Samayam Tamil 1 week ago

ண் கணிதத்தின்படி, ஒருவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் அவருக்கான பலனை கணக்கிடப்படுகிறது. குறிப்பாக அவருடைய வாழ்க்கை, தொழில், வேலை, செல்வநிலை, திருமண வாழ்க்கை உள்ளிட்டவை எப்படி அமையும் என கணக்கிடப்படுகிறது.

அந்த விதத்தில் ஒருவர் தன் வாழ்நாளில் என்ன வயதில் கோடீஸ்வரன் ஆகும் அதிக வாய்ப்புகளை பெறுவார் என தெரிந்து கொள்வோம்.


எண் கணிதத்தில் செல்வம் மற்றும் முன்னேற்ற காலங்கள் எப்படி கணிக்கப்படுகின்றன?
ஜோதிடத்தில் வகைகள் உண்டு. அனைத்து நோக்கம் அவருடைய வாழ்க்கை மற்றும் அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணிப்பதாகவே இருக்கும். அந்த விதத்தில் எண் கணிதத்தின்படி, ஒருவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும், அவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் அவருக்கு எந்த வயதில் செல்வம் சேரும், எந்த காலகட்டம் மிகவும் சிறப்பானதாகவும், பெரிய அளவில் உரியை அடைவார்கள், கோடீஸ்வரன் ஆகக்கூடிய அதிக வாய்ப்புகள் எப்போது பெறுவார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.எண் 1 ல் பிறந்தவர்கள்

உங்களுடைய பிறந்த தேதி ஏதேனும் ஒரு மாதத்தில் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதியாக அமைந்திருந்தால், எடுத்துக்காட்டாக 19ம் தேதியில் பிறந்திருப்பின் 1+9= 10, 1+0=1. இவருடைய உடல் எண் 1.
சூரியனின் ஆதிக்கம் கொண்ட எண் 1 கொண்டவர்கள் தங்களுடைய வேலை மற்றும் வாழ்க்கையில் வெற்றி அடைய புதிய வழிகளை காண்பார்கள். அளவற்ற செல்வத்தை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய 22 ஆவது வயது முதல் மிகவும் சிறப்பான காலமாக அமையும்.


எண் 2 ல் பிறந்தவர்கள்

ஏதேனும் ஒரு மாதத்தில் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அவர்களுடைய உடல் எண் 2 ஆகும். இந்த எண் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கும். இவர்கள் தங்களுடைய 24 வது வயது மிகவும் மங்களகரமானதாக அமையும். இந்த வயதில் இவர்கள் எடுக்க கூடிய எந்த ஒரு முன்னெடுப்பும் நல்ல பலனை தரும். அதனால் இவர்கள் செய்யக்கூடிய தொழில் மற்றும் பொருளாதார நிலை பெரிய அளவில் முன்னேற்றத்தை காணலாம். இதனால் இந்த வயதிலிருந்து இவர்களுடைய வங்கி கையிருப்பு கணிசமாக உயரும்.


எண் 3 ல் பிறந்தவர்கள்

எந்த மாதத்திலும் 3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்திருந்தால், உங்கள் உடல் எண் (பிறந்த எண்) 3 ஆகும். குருவின் ஆதிக்கம் எண் 3-ஐக் கொண்ட நபர்களுக்கு அவர்களுடைய 32-வது வயது மிகவும் அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இருக்கும். இவர்கள் 32-வது வயதில், தங்களுடைய கடுமையான உழைப்பிற்கான முழு பானை அடைவார்கள். இது அவர்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையில் பலமடைய செய்யும். அதிக அளவில் சம்பாதிக்கக்கூடிய யோகமும் அவர்களுக்கு அமையும்.


எண் 4 ல் பிறந்தவர்கள்

ஏதேனும் ஒரு மாதத்தில் 4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறந்த எண் 4 என கணக்கிடப்படுகிறது. ராகுவின் ஆதிக்கமான எண் 4ல் பிறந்தவர்கள் தங்களுடைய 36 மற்றும் 42வது வயதில் அவர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்கள் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு புதிய வியாபாரம் அல்லது தொழில அமையும். இவருடைய பொருளாதாரம் முன்னேற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் தேடிவரும். சொத்து சம்பந்தமான கூடுதல் நன்மைகள் பெறுவார்கள்.


எண் 5 ல் பிறந்தவர்கள்

எந்த மாதத்திலும் 5, 14 அல்லது 23 ஆகிய தேதி ஒன்றில் நீங்கள் பிறந்திருந்தால், உங்களுடைய உடல் எண் 5 ஆகும். புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த 5ம் எண்ணில் பிறந்த நபர்களுக்கு தங்களுடைய 32 வது வயது மிகவும் அதிர்ஷ்டத்தையும், பிறருடைய முழுமையான ஆதரவையும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் திடீரென பொருளாதார ஆதாயம் உயரும் வாய்ப்புகள் ஏற்படும்.


எண் 6 ல் பிறந்தவர்கள்

ஒரு நபர் ஏதேனும் ஒரு மாதத்தில் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் அவருடைய உடல் எண் 6 ஆகும்.
சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டிருக்கக்கூடிய எண் 6ல் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் 25 ஆம் வயதில் எதிர்பாராத பெரிய வெற்றியை அடைவார்கள். மேலும் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுடைய வாழ்க்கையில் அற்புதமான வாய்ப்புகள், வசதிகளும் சேரும். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என அனைத்தும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்திருக்கும்.


எண் 7 ல் பிறந்தவர்கள்

ஒரு நபர் ஏதேனும் ஒரு மாதத்தில் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்திருப்பின் அவருடைய பிறந்தவர்களின் பிறந்த எண் 7 ஆகும். கேதுவின் ஆதிக்கம் கொண்ட எண் 7-ஐக் கொண்டவர்களுக்கு தங்களுடைய 34-வது மற்றும் 38-வது வயதில் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும், சுபமானவையாக அமையும். இந்த காலகட்டத்தில் இவர்களுடைய நிதி நிலைமை பெரிய அளவில் முன்னேற்றம் அடையும். இந்த வயதுகளில் தாங்கள் செய்யக்கூடிய வேலை, வியாபாரம், தொழிலில் அதிகமான முயற்சியில் ஈடுபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.


எண் 8 ல் பிறந்தவர்கள்

ஒரு நபர் ஏதேனும் ஒரு மாதத்தில் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவராக இருப்பின் அவர்களுடைய உடல் எண் 8 ஆகும்.
சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட எண் 8-ஐக் கொண்டவர்களுக்கு, அவர்களின் 36 மற்றும் 42 ஆகிய வயதுகள் மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் சிறப்பான பலன்களை பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு முயற்சி மற்றும் இவர்கள் செய்யக்கூடிய மாற்றங்கள் நல்ல பலனை தரும். மேலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு சொத்து சேரும்.


எண் 9 ல் பிறந்தவர்கள்

ஒரு நபர் ஏதேனும் ஒரு மாதத்தில் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அந்த நபருடைய உடல் எண் 9 ஆகும்.
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த எண் 9ல் பிறந்த நபர்கள் தங்களுடைய 28 வது வயது மிகவும் சிறப்பான முன்னேற்றத்தை தரக்கூடியதாக அமையும். குறிப்பாக அவர்களுடைய சொல் மற்றும் செயல்பாடுகளால் மரியாதை, புகழ், வெற்றிய என அனைத்தையும் பெறுவார்கள்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil