வேதம் மற்றும் ஜோதிட சாஸ்திரங்களை விளக்கக் கூடிய லால் கிதாப் குறிப்புகளின் படி கிரகங்களின் சில சாதகமற்ற அமைப்பு அல்லது உடலில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் எந்த கிரகங்களின் சாதகமற்ற தாக்கத்தால் ஏற்படுகிறது என்பதை உணர்த்தக் கூடியதாக அமைகிறது.
நம்முடைய நக கண்களின் நிறத்தை வைத்து நம்மளுடைய உடல் ஆரோக்கியத்தை கணிப்பதோடு, எந்த கிரகத்தால் நாம் பலவீனம் பட்டுள்ளோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
நகக் கைரேகை
பொதுவாக நம்முடைய கை மற்றும் கால் விரல்களின் நகங்கள் சீராகவும் சரியான அமைப்பு, சரியான நிறத்துடன் இருக்க வேண்டியது அவசியம். நகங்களின் சிதைவு, அதன் அமைப்பு மாறுவது, நிறங்கள் மாறுவது போன்ற விஷயங்கள் சில கிரகங்களின் அசுப விளைவுகளின் தாக்கம் என கூறப்படுகிறது. இந்தப் பதிவில் குறிப்பிட்டது போல் உள்ள நகங்களின் வடிவம் மற்றும் நிறம் எந்தெந்த கிரகங்களின் தாக்கம் மற்றும் அவற்றிற்கான எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.பலவீனமான புதன் உணர்த்தும் அறிகுறிகள்

ஒரு நபருக்கு பலவீனமான புதன் கிரகத்தின் தாக்கம் இருந்தால் அவருடைய கைவிரல் நகங்கள் வட்டமான அமைப்பாகவும் மற்றும் லேசான பச்சை நிறமாகவும் காணப்படும்.
பலவீனமான புதனின் விளைவுகள்:புதன் பகவான் ஒரு தனி நபருடைய அறிவு மற்றும் பேசும் முறையை குறிப்பிடுகிறது. இவற்றின் தாக்கம் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு உதவும். புதன் சாதகமற்ற அமைந்திருப்பின் அவர் கல்வியில் சில தடைகளையும், வேலை, வியாபாரத்தில் பிரச்சனைகள், நிதி சார்ந்த சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
எளிய பரிகாரம்
ஒருவர் தங்களுடைய வாழ்க்கையில் புதனின் சாதகமான தாக்கத்தை பெற பச்சை நிற ஆடைகளை அணியவும். புதன்கிழமைகளில் ஒரு பசுவிற்கு பசுந்தீவனம், கீரைகள் கொடுக்கவும்.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்து புதனுக்குரிய "ஓம் பும் புதாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
பலவீனமான ராகுவின் அறிகுறிகள்

ஒருவருடைய ஜாதகத்தில் பலவீனமான ராகுவின் அமைப்பு இருப்பின், அவருடைய நகங்கள் அகலமாகவும், இன்று ஒரு காயம் இல்லாமலே நீல நிறத்தில் தோன்றலாம். மேலும் நகங்கள் வளைந்து, கோணலாகவும், நகங்கள் வெளிரிப் போய் காணப்படும்.
பலவீனமான ராகுவின் விளைவுகள்: ராகு பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால், உங்களுடைய மனதில் உறுதி தேவையற்ற பயம் ஏற்படும். முக்கிய வேலைகளை செய்து முடிக்க முடியாது மன குழப்பத்தில் இருப்பீர்கள். அதனால் முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் சந்திக்க வாய்ப்பு உண்டு. மேலும் அடுத்தடுத்த உடல் நலம் பாதிப்புகள், தசை இருக்கம், ரத்தம் சார்ந்த சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்
அருகில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்று நீரால் அபிஷேகம் செய்யவும். "ஓம் ரான் ரஹவே நமஹ" (Om Raan Rahve Namah) என்ற மந்திரத்தை தினமும் 108 ஜெபிக்கவும்.
பலவீனமான சுக்கிரனின் தொந்தரவுகள்

சுக்கிரனின் சுப தாக்கமாக இருப்பின் அவருடைய விரல் நகங்கள் வெண்மை நிறத்துக்கு மாறுவதோடு, நகங்கள் சிறியதாக இருக்கும். உடலில் ரத்தம் குறைந்ததாக உணர்வீர்கள்.
பலவீனமான சுக்கிரனின் விளைவுகள்
நவகிரகங்களில் சுக்கிரன் திருமண வாழ்க்கை, அழகு, செல்வம், சுகபோகங்களை தரக்கூடியவர். இவர் ஒருவரின் ஜாதகத்தில், பலவீனமாக இருப்பின் அவருடைய திருமண வாழ்க்கையில் அதிகளவில் தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். துணையுடன் இணக்கம் இல்லாத சூழல் ஏற்படும். மகிழ்ச்சிக்கு தடையும், எந்த வித சுகமும் அனுபவிக்க முடியாத நிலை இருக்கும்.
எளிய பரிகாரம்
வெள்ளிக்கிழமைகளில் பால், தயிர், சர்க்கரை போன்ற பொருட்களை தானமாக வழங்கலாம். மேலும் தினமும் 'ஓம் ஷுன் சுக்ராய நமஹ' (Om Shun Shukray Namah) என்ற சுக்கிர மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும். முடிந்தால் வெள்ளிக்கிழமைகளில் வெண்மை, இளஞ்சிவப்பு நிற ஆடைகளையும் தானமாக வழங்கலாம்.
பலவீனமான குருவின் அமைப்பு

ஒருவருடைய விரல் நகங்கள் மிகவும் சிறியதாகவும், மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டால் அந்த நபருக்கு குரு கிரக நிலை பலவீனமாக இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
பலவீனமான குருவின் விளைவுகள்:
குரு கிரகம் பொதுவாக செல்வம், அதிர்ஷ்டம், இனிய திருமண வாழ்க்கை, ஞானத்தை தரக்கூடியவர். ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பின் அந்த நபருக்கு தொழில் அல்லது வேலை தொடர்பாக தடைகளும், கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்காமல் போகலாம். சிலருக்கு திருமண தடைகள் அல்லது திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படலாம்.
குரு பலப்படுத்தும் பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் வாழைப்பழம், மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் நிற பொருட்கள், கொண்டைக் கடலை உள்ளிட்டவை தானமாக வழங்கலாம். முடிந்த போதெல்லாம் நீங்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நல்லது. நீங்கள் குளிக்கும் போது சிறிதளவு மஞ்சள் துள் கலந்து குளிப்பது நல்லது.
பலவீனமான கேதுவின் அறிகுறிகள்

ஒருவருக்கு மிகவும் நீளமானதாகவும், குறுகலாகவும் காணப்படக்கூடிய நகங்கள் கேதுவின் அறிகுறி ஆகும். மேலும் புள்ளி நிறைந்த நகங்கள் இதனை தொடர்புடையது.
பலவீனமான கேது தரும் பலன்கள்
ஜோதிடத்தில் நிழல் கிரகம் என அழைக்கப்படக்கூடிய கேது ஒரு ஜாதகத்தில் பலவீனமாக இருப்பின் அவருடைய வீட்டில் சுப பலன்கள் குறைவாக நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்காத நிலையில், முடிவுகள் எடுப்பதில் மனக்குழப்பம் இருக்கும்.
கேதுவிற்கான எளிய பரிகாரங்கள்
பலவீனமான கேது உள்ள நபர்கள் தினமும் அருகம்புல்லை சாற்றி விநாயக பெருமானை வழிபாடு செய்து, எந்த ஒரு வேலையையும் தொடங்குவது நல்லது. "ஓம் கெம் கேதவே நமஹ" (Om Kem Ketave Namah) என்ற கேது மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது உச்சரிக்கவும்.
பலவீனமான சனியின் அறிகுறிகள்

ஒருவருடைய ஜாதகத்தில் சனி அமைப்பு சாதகமற்றதாக இருப்பின் அந்த நபரின் நகங்கள் நடுத்தர அளவிலும், சற்று கருப்பாகவும் காணப்படும்.
பலவீனமான சனியின் விளைவு
பலவீனமாக ஒரு ஜாதகர், அவருடைய வேலை அல்லது தொழில் தொடர்பாக கடினமான உழைப்பை மேற்கண்ட பொழுதிலும், அவர் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியாமல் தவிப்பார். மேற்கொள்ளும் பணிகளில் தடைகளை சந்திக்க நேரிடும். சனியின் அசுபமான தாக்கம் உங்களுடைய வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்வார்கள்.
எளிய பரிகாரம்சனிக்கிழமைகளில் தேவைப்படுபவர்களுக்கு கருப்பு நிற ஆடை, குடை, கருப்பு எள், உணவு தானம் போன்றவற்றை தானமாக வழங்கலாம்.சனி பகவானின் கோயிலுக்கு கடுகு எண்ணெய் சமர்ப்பித்து சனி பகவானை வழிபடவும். "ஓம் ஷம் ஷனைச்சராய நமஹ" என்ற மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது ஜபியுங்கள்.

