Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக வாக்குறுதிகள்...விஜய் பாணியிலேயே சொல்லனும்னா...தவாக தலைவர் வேல்முருகன் கருத்து

தவெக வாக்குறுதிகள்...விஜய் பாணியிலேயே சொல்லனும்னா...தவாக தலைவர் வேல்முருகன் கருத்து

Samayam Tamil 2 months ago

மிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜய் மற்ற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்து பேசி வந்தார்.

இந்த சமயத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த விழா ஒன்றில் தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். அது தற்போது மிகப்பெரிய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்தால் மற்ற கட்சிகளின் வாக்குறுதிகளை போலவே இருக்கின்றது என்றும், மற்ற கட்சிகளின் வாக்குறுதிகளை காப்பி பேஸ்ட் செய்தது போல இருக்கின்றது என்றும் கடும் விமர்சனங்கள் முன் வைக்க படுகின்றன.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, தேர்தல் வாக்குறுதி என்பது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம், அதைப்பற்றி நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை என கூறினார். அதனைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சி தலைவர் வைகோவிடம் விஜய்யின் வாக்குறுதிகள் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், தேர்தல் வாக்குறுதி என்பது அந்த கட்சியின் உரிமை, அவர்களின் விருப்பம்,அது குறித்து நான் கருத்து சொல்லவோ அதைப்பற்றி கமெண்ட் செய்யவோ மாட்டேன் என்றார். இவ்வாறு அவரவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பெரிதான கருத்து எதுவும் சொல்லாத நிலையில்தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விஜய்யின் வாக்குறுதிகள் குறித்து தன் கருத்தினை கூறினார்.

விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அவரது பாணியிலேயே சொல்லனும்னா, கருத்து சொல்கின்ற அளவிற்கு வொர்த் இல்லை என்றார். மேலும் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள், அந்த மாநில கட்சிகளின் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் அவர் சொல்கின்ற திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே நம் மாநிலத்தில் ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் திட்டங்கள்.

அதைப்பற்றி எல்லாம் தெரியாமலே அவர் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றார் என்றார் வேல்முருகன். மேலும் சமீபகாலமாக விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அநேகமாக காங்கிரஸ் கட்சியுடன் தான் விஜய் கூட்டணி வைப்பார். திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு முரண் இருப்பதால் கண்டிப்பாக காங்கிரஸ் -தவெக கூட்டணி இணையும் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால் கடைசியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாஜகவில் விஜய் இணைய வாய்ப்புகள் உள்ளது, விஜய் மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை ரகசியமாக போய்க்கொண்டு இருக்கின்றது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. ஆனால் இது எதுவும் உறுதியான தகவல் இல்லை. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடமும் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், விஜய்கட்சி துவங்கியபோது பாஜகவின் கொள்கைக்கு எதிராகவே இருந்தார். ஒருவேளை பாஜகவுடன் விஜய் கூட்டணி வைத்தால் தமிழக மக்கள் கண்டிப்பாக அவரை நிராகரித்துவிடுவார்கள் என்றார் வேல்முருகன். இதனிடையில் கடந்த ஒரு சில நாட்களாக விஜய் மற்றும் பாஜக கூட்டணி இணையுமா ? இணையாதா ? என்ற விவாதங்கள் தான் அதிகமாக போய்க்கொண்டு இருக்கின்றது.

ஒரு சிலர் விஜய் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என்கின்றனர். ஆனால் ஒரு சிலரோ அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்கின்றனர். ஒருவேளை கூட்டணி அமைந்தால் தவெக தலைமையில் தான் அந்த கூட்டணி அமைய வேண்டும் என்பது விஜய்யின் குறிக்கோள்.



அதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக பாஜக -தவெக கூட்டணி இணையாது என்பது போல தான் தெரிகின்றது. இருப்பினும் அரசியல் களத்திலும் சோஷியல் மீடியாக்களிலும் தவெக மற்றும் பாஜக கூட்டணி இணையுமா ? என்ற கோணத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் விடை தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil